Bare ActsThe Tamil Nadu Aided Institutions (Prohibition of Transfers of Property (Extension to Pudukkottai) Act, 1961

Section 7

இர்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்‌

Amendment status not verified — confirm the current text below against the official source.

இர்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்‌.- (1) இந்தச்‌ சட்டத்தின்‌ விதிகளையோ அல்லது இந்தச்‌ சட்டத்தின்‌ மூலம்‌ இணைக்கப்பட்ட புதுக்கோட்டை பிரதேசத்திற்கு நீட்டிக்கப்பட்ட ஏதேனும்‌ தமிழ்நாடு சட்டத்தையோ செயல்படுத்துவதில்‌ ஏதேனும்‌ இடர்பாடுகள்‌ ஏற்பட்டால்‌, மாநில அரசு, சந்தர்ப்பத்திற்கு ஏற்ப. உத்தரவின்‌ மூலம்‌, இடர்பாடுகளை ந்க்குவதற்குத்‌ தேவையான எதையும்‌ செய்யலாம்‌. (2) (1) ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ பிறப்பிக்கப்பட்ட ஒவ்வொரு உத்தரவும்‌, அது வெளியிடப்பட்டவுடன்‌, கூடிய விரைவில்‌, சட்டமன்றத்தின்‌ இரு அவைகளிலும்‌ வைக்கப்பட வேண்டும்‌. மேலும்‌, அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடரின்‌ அல்லது அடுத்த கூட்டத்தொடரின்‌ காலாவதிக்கு முன்‌, இரு அவைகளும்‌ அத்தகைய எந்தவொரு உத்தரவிலும்‌ ஏதேனும்‌ திருத்தத்தைச்‌ செய்ய ஒப்புக்கொண்டால்‌ அல்லது இரு அவைகளும்‌ அந்த உத்தரவைப்‌ பிறப்பிக்கக்‌ கூடாது என்று ஒப்புக்கொண்டால்‌, அதன்‌ பிறகு அந்த உத்தரவு அத்தகைய மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில்‌ மட்டுமே நடைமுறைக்கு வரும்‌ அல்லது எந்த விளைவையும்‌ ஏற்படுத்தாது. இருப்பினும்‌, அத்தகைய எந்தவொரு திருத்தமோ அல்லது ரத்துசெய்தலோ அந்த உத்தரவின்கீழ்‌ முன்னர்‌ செய்யப்பட்ட எதன்‌ செல்லுபடித்தன்மைக்கும்‌ பாதகமாக இருக்காது.

Section 7 – The Tamil Nadu Aided Institutions (Prohibition of Transfers of Property (Extension to Pudukkottai) Act, 1961 | DailyLaw.ai